A great video presentation, showing the worship in ancient Dravidan Age. The song is again a wonderful composition by Illayaraja on a hymn from Thiruvasagam, a great work by ancient scholar Manichavasagar, sung in praise of Lord Shiva
-- Abirami Varma
For those who want the lyrics ..
பூவார் சென்னி மன்னன்னெம் புயங்கப் பெருமான் | சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் (2)
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் |
மிகவே நினைமின் மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின்கள் (2)
நகவே ஞாலத் துட்புகுந்து நாயனைய நமையாண்ட |
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே |

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் |
யாமார் எமதார் பாசம் யார் என்னமாயம் மாயம் இவைபோகக் |
கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு |
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை |
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பை |
செடிசே ருடலை செலநீக்கிச் | சிவலோகத்தே நமைவைப்பான் |
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே |

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை |
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் |
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அடியார் கதவ டையாமே |

புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே |
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் |
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் | பெறுதற் கரியன் பெருமானே
பெறுதற் கரியன் பெருமானே |
பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் | சிறியோமை பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் |
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் | பெறுதற் கரியன் பெருமானே
பெறுதற் கரியன் பெருமானே |
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் | உருக்கும் வெள்ளக் கருணையினால் |
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் |
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே |

பொய்விட் டுடையான் கழல்புகவே ……
( People who are keen to know the meaning of this song - kindly look for Poovar Senni Mannan - Song of Thiruvasagam )
---- Abirami